Tuesday, March 7, 2017

உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் காய்கறி சூப்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த சூப்பை தினமும் செய்து குடித்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - அரை கப்

எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்

சோம்பு - கால் டீஸ்பூன்

பிரிஞ்சி இலை - ஒன்று

கேரட், பீன்ஸ், குடமிளகாய், கோஸ் - அரை கப்

பச்சை மிளகாய் - ஒன்று

உப்பு - தேவைகேற்ப

கறிவேப்பில்லை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

தேங்காய் பால் - 4 டீஸ்பூன்

மிளகு தூள் - கால் டீஸ்பூன்

தண்ணீர் - மூன்று கப்

செய்முறை :

* காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெறும் கடாயில் ஓட்ஸ் சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின் கேரட், பீன்ஸ், கோஸ், குடமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

* அடுத்து அதில் வறுத்த ஓட்ஸ் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.

* அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கலக்கவும்.

* பிறகு, கறவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து மூடி வேகவிடவும்.

* நன்றாக வெந்ததும் இறக்கி மிளகு தூள், தேங்காய் பால், கொத்தமல்லி சேர்த்து கிளறி பரிமாறவும்.

* சத்தான சுவையான ஓட்ஸ் காய்கறி சூப் ரெடி.