Tuesday, March 7, 2017

மாலை நேர ஸ்நாக்ஸ் வீட்டிலேயே செய்யலாம் வாங்க .....சீஸ் - கார்ன் கச்சோரி


சீஸ் - கார்ன் கச்சோரி

குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கச்சோரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். சீஸ், கார்ன் வைத்து கச்சோரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மைதா - இரண்டு கப்

சீஸ் - 2௦௦ கிராம்

ஸ்வீட் கார்ன் - இரண்டு கப்

இஞ்சி, பூண்டு விழுது - இரண்டு டீஸ்பூன்

கரம் மசாலா - இரண்டு டீஸ்பூன்

எலுமிச்சை பழம் சாறு - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

செய்முறை :

* ஸ்வீட் கார்னை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* சீஸை துருவிக் கொள்ளவும்.

* மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அடித்து பிசைந்து, (சப்பாத்தி மாவு பதத்தில்) அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா, அரைத்த கார்ன், உப்பு சேர்த்து வதக்கவும். 

* அடுத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கி ஆறவிடவும்.

* மசாலா நன்றாக ஆறியதும் அதில் துருவிய சீஸை சேர்த்து கிளறவும்.

* பிசைந்து வைத்துள்ள மாவை பூரியாக திரட்டி, கார்ன் கலவையை நடுவில் வைத்து மூடி, அதிக அழுத்தம் தராமல் தட்டி வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்த கச்சோரிகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

* சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் சீஸ் கார்ன் கச்சோரி ரெடி.

இது போன்று பல வகையான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி இதனை சாப்பிடுவார்கள் .